எட்டாத உயரத்தில்
எட்டான கால் கொண்டு
பட்டான நூல் கொண்டு
கட்டிய வலை வீட்டில் விழும்
விட்டில் உண்டு மகிழும்
எட்டுக்கால் பூச்சி நான்
கட்டாந் தரையிலும்
நெட்டான சுவரிலும்
கட்டாக நடந்து
கிட்டாமல் கிட்டியதை
கட்டாகக் கட்டி
பொட்டாகச் சுமந்து
பெட்டியில் வைத்துண்ணும்
குட்டிக்கால் எறும்பு நான்
தட்டான கணினியை
பட் பட் பட்டென்று
தட்டித் தட்டித் தட்டி
நெட்டெல்லாம் தேடி
நைட்டெல்லாம் கண் விழித்து
கட்டுக் கட்டாய்
நோட்டு எண்ணி
தட்டுத் தட்டாய்த் தின்று
செரிமானம் இல்லையென்றோ
சரி மனம் இல்லையென்றோ
மருத்துவரை நாடாமல்
உண்ண உழைக்காமல் எம்போல்
உழைத்து உண்க வென்று
உழைப்பாளர் தினத்தன்று
வாழ்த்துரை கூறுகின்றோம்.
வாழ்க வளமுடன்.
5 comments:
கவிதைக் கட்டிடத்தை ரசிக்க முடிந்தது.
ஆஹா அருமை.
கவிதையை ரசனையோடு அழகுபடுத்தியதைத்தான் கூடுதலாக ரசிக்க முடிந்தது.நானும் முயற்சி செய்து பார்க்கப்போறேன் !
அருமை.
வாழ்த்துக்கள்
மிக நல்ல சிந்தனை வரிகள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment