Saturday, March 15, 2008

தாலாட்டு : புல்லின் நுனியில் பனித்துளி

<< இசைக்கோர்ப்பு இன்னும் முடியவில்லை. பாடல் கேட்க மீண்டும் வருக ! >>

ஆரிராரோ ஆராரோ ...

புல்லின் நுனியில் பனித்துளி
மரக்கிளையினில் பசுங்கிளி
கண்கள் மூடித் தூங்குது பார் மானே
நீ அன்னை மடியில் உறங்கிடுவாய் தேனே ( ஆரிராரோ ஆராரோ ...)

நட்சத்திரங்கள் மினுக்கிட
மின்மினிப் பூச்சிகள் ஜொலித்திட
நிலவும் கூட சிரிக்குது பார் வானில்
நீ சிரித்தபடி உறங்கிடு என் தோளில் ( ஆரிராரோ ஆராரோ ...)

கடற்கரையினில் அலைகளும்
வலையின் வெளியில் கொசுக்களும்
ராகம் இசைத்துப் பாடுது பார் மானே
நீ பாடல் கேட்டு உறங்கிடுவாய் தேனே ( ஆரிராரோ ஆராரோ ...)

அத்தை ஒருபக்கம் அணைத்திட
பாட்டி மறுபக்கம் கதைசொல்ல
பாசமுள்ள குடும்பமிது மானே
நீ ஆசையுடன் உறங்கிடுவாய் தேனே ( ஆரிராரோ ஆராரோ ...)

Sunday, March 9, 2008

படிப்படியா படிக்கணும்


Listen to the Song ( link opens in a new window )

பாடல் : மோசி பாலன்

இசை : மணி
_____________________________________________

படிப்படியா படிக்கணும்
பல படிகள் கடக்கணும்
பூவைத் தேடி பறக்குது பார் தேனீ
நல்ல புத்தகத்தைப் படிக்கிறவன் ஞானி

பந்து விளையாடணும்
நண்பருடன் ஓடணும்
காற்றடைத்தால் பறக்குது பார் பந்து
இந்த பூமி ஒரு காற்றடிக்கும் பந்து

இயற்கை எல்லாம் ரசிக்கணும்
இயற்கை நலம் காக்கணும்
மரமரமாய் பறக்குது பார் குருவி
அந்த மலையிலிருந்து கொட்டுது பார் அருவி

உழைப்பதிலே பிழைக்கணும்
பிழைத்திருந்தால் உழைக்கணும்
கண் இமைத்தால் பறக்குது பார் காலம்
இன்று ஒரு நொடியில் மாறுது பார் உலகம்

படிப்படியா படிக்கணும் ............