Sunday, March 9, 2008
படிப்படியா படிக்கணும்
Listen to the Song ( link opens in a new window )
பாடல் : மோசி பாலன்
இசை : மணி
_____________________________________________
படிப்படியா படிக்கணும்
பல படிகள் கடக்கணும்
பூவைத் தேடி பறக்குது பார் தேனீ
நல்ல புத்தகத்தைப் படிக்கிறவன் ஞானி
பந்து விளையாடணும்
நண்பருடன் ஓடணும்
காற்றடைத்தால் பறக்குது பார் பந்து
இந்த பூமி ஒரு காற்றடிக்கும் பந்து
இயற்கை எல்லாம் ரசிக்கணும்
இயற்கை நலம் காக்கணும்
மரமரமாய் பறக்குது பார் குருவி
அந்த மலையிலிருந்து கொட்டுது பார் அருவி
உழைப்பதிலே பிழைக்கணும்
பிழைத்திருந்தால் உழைக்கணும்
கண் இமைத்தால் பறக்குது பார் காலம்
இன்று ஒரு நொடியில் மாறுது பார் உலகம்
படிப்படியா படிக்கணும் ............
Labels:
கவிதை,
மழலையர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இசையுடன் கேட்க இனிமையாய்
பொருளுடன் பார்க்க பொதிகையாய்
மனதை மயக்கும் தன்மையாய்
அமைந்ததே இந்த அருங்கவிதை.
மென்மேலும் காண விழைகின்றேன்,
அன்புடன்,
செல்வம்
Nice one, more of late 50s-60s; Sounds more like Kalaivanar song. Quick Suggestion: Adding some jokes esply like kalaivanar's song cum knowledgeable jokes will add more flavor to this song.
-S
Post a Comment