Monday, April 16, 2012

பாடிப் பறக்கும் பறவைகள்

பகல் நேரத் தாரகைகளே;
மரங்களிலிருந்து வானில் தூவிய
மகரந்தம் பூசி மலர்ந்த மலர்களே;
இன்னிசையின் சிகரங்களே
இல்லை இல்லை...
இசையின் அகரங்களே

உம்மிடம் கற்றோம் - பாடிப் பறக்க.
மேலும் கற்றோம் மேலும் பலப் பல.

உம்போல்-
ஓருடையாக சீருடை அணிந்தோம்.
வண்ணக் கொண்டைகள், தொப்பிகள் அணிந்தோம்.
கூடிப் பறந்தோம் பிரிந்தும் பறந்தோம்
தேடிப் பகிர்ந்தோம்

காகத்தின் கூட்டில் வளரும் குயில் போல்
பாட்டி வீட்டில் பிள்ளை வளர்த்தோம்

மண்ணாசை மறந்து - தன்னினம் காக்க
ஆயிரம் மைல்கள் ஆண்டாண்டு பறக்கும்
உம்போல் எமக்கும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

அலகுகள் ஒடிந்து சிறகுகள் ஓயும்வரை
உம்போல் யாமும்
பாடிப் பறப்போம்

5 comments:

ஸ்ரீராம். said...

இன்னிசை அகரங்கள்.... !

அருமை.

மகேந்திரன் said...

பறவைகளிடமிருந்து
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய
பாடங்கள் நிறைய இருக்கின்றன
என மறுபடியும் உணர்த்தும்
அழகிய கவிதை...

கௌதமன் said...

//அலகுகள் ஒடிந்து சிறகுகள் ஓயும்வரை
உம்போல் யாமும்
பாடிப் பறப்போம் //
ஓம் ஓம் ஓம் !!

கௌதமன் said...
This comment has been removed by the author.
ஹேமா said...

ஐந்தறிவுகள் சொல்லித் தந்த பாடங்களும் வழிகாட்டலும் நிறையவே எமக்கு !

படம் பார்த்துக் கவிதை தந்த உங்களுக்கு உப்புமடச்சந்தியில் விருது ஒன்று காத்திருக்கிறது.
எடுத்துக்கொள்ளுங்கள் !

http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post_17.html