Saturday, April 7, 2012

மனிதனும் பாம்பும் - சிலேடை

பண்ணிசை நாடும் படமெடுத்து ஆடிடும்
கொண்டவுடை மாற்றும் - புறமுதுகு பாராது
எண்ணிய தன்இணை இன்முகம் பார்த்துடல்
பின்னும் அரவாம் நரன்

5 comments:

மகேந்திரன் said...

சொல்லியது உண்மையே..
அருமையா இருக்குது நண்பரே சிலேடை...

ஹேமா said...

பாம்பின் இயல்பா மனிதனுக்கு.சரியாகச் சொல்லியிருக்கிறீங்க பாலன்.
பயம்தான் !

கௌதமன் said...

நல்லா இருக்கு. என் போன்ற மரமண்டைகளுக்காக, பொழிப்புரையும் எழுதியிருக்கலாம்!

மோ.சி. பாலன் said...

நன்றி மகேந்திரன், ஹேமா.
கௌதமன் - நேரடியான பொருள்தான். கொண்டு கூட்டும் பொருள் ஏதும் இல்லை.
மனிதனுக்கும் பாம்புக்கும் உள்ள ஒற்றுமைகள்:
இசைக்கு மயங்கும். படம் எடுத்து ஆடும்.
தோலுரிக்கும் அல்லது உடை மாற்றும். பிற உயிரினங்கள் போல் பின்புறம் கூடாமல், தமது இணையின் மகிழ்வான முகம் பார்த்து இணையும்!

சிவகுமாரன் said...

மிகவும் ரசித்தேன்