மாட்டிய மீன்,
தூண்டில்காரன்,
வேடிக்கைப் பார்ப்பவர்-
இவர்கள் மட்டுமா?
தண்ணீரும் துடித்தது
........ தக்கை மூழ்கியதும்.
புழுவைத் தவிர.
தூண்டில்காரன்,
வேடிக்கைப் பார்ப்பவர்-
இவர்கள் மட்டுமா?
தண்ணீரும் துடித்தது
........ தக்கை மூழ்கியதும்.
புழுவைத் தவிர.
5 comments:
மீனும் துடித்தது....ஆர்வத்தில்!
ரொம்பப் பழங்காலத்தில், வீணை காயத்ரி சிறுமியாக இருந்தபோது, எங்கள் ஊரில் வீணை கச்சேரி செய்தார். (நாகை தேசிய உயர்நிலைப் பள்ளி.) கச்சேரியின் இறுதியில், சுருக்கமாக மத்யமாவதியில் மூன்றே மூன்று மீட்டுகள் (மூன்றே வினாடிகள்) வாசித்து முடித்தார். ரசிகர்களுக்கு (என் அம்மா உட்பட) ஒன்றும் புரியவில்லை. எல்லோரும் ஆவலாக உட்கார்ந்திருந்தனர். ஊர்ப் பிரமுகர் எஸ் பி (S.B) எழுந்தார் - காயத்ரியை நோக்கி சொன்னார் "அம்மா எங்க ஊர் ரசிகர்கள் எல்லோரும் குழல் விளக்கு போன்றவர்கள் - மங்களம் வாசிப்பதை சற்று விஸ்தாரமாகவே வாசித்துவிடு." என்றார். காயத்ரி பிறகு, விஸ்தாரமாக மங்களம் வாசித்தார். நாங்களும் மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பினோம். தூண்டில் 2 படித்ததும், அந்த ஞாபகம் வருகிறது. இந்த கு வி கௌதமனுக்காக பதிவிட்டதற்கு நன்றி!
முதல் வணக்கம் பாலன் !
கவியின் வரிகளும் துடிக்குதே !
ஆகா!
முதலில் உங்கள் கவிதைக்கு, அடுத்து கௌதமனின் பின்னூட்டத்துக்கு.
கௌதமன், ஸ்ரீராம், ஹேமா, அப்பாதுரை - நன்றி. நன்றி
Post a Comment