Wednesday, July 7, 2021

REMIX அவஸ்தைகள்

என்னைப் போன்ற ரீமிக்ஸ் கவிஞர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை உண்டு. எங்காவது, ஏதாவது ஒரு வரியைப் படித்துவிட்டாலோ கேட்டுவிட்டாலோ, உடனே ஒரு திரைப்படப் பாடல் மெட்டு flash ஆகிவிடும்! அதை வைத்து ஒரு ரீமிக்ஸ் எழுத ஆரம்பித்து விடுவோம்!

அப்படித்தான் இன்று ஒரு பழ வண்டியில் "ஏசுவின் ரத்தம் ஜெயம்" என்ற வாசகத்தைப் படித்ததும் மனதில் ஒரு பழைய பாடல் flash ஆனது. 

உங்களுக்கு இந்த வாசகத்தைப் படித்தால் ஏதாவது பாடலின் மெட்டு  flash ஆகிறதா? 

எனக்குத் தோன்றிய பாடலைக் கமெண்ட்டில் பின்னர் எழுதுகிறேன்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இல்லை... காத்திருக்கிறேன்...

மோ சி பாலன் said...

தனபாலன், ஆசையினாலே மனம் பாடல் தான் எனக்குத் தோன்றியது

ஏசுவின் ரத்தம் ஜெயம்
அவசியம் செய்யணும் ஜெபம்
அல்லேலூயா பாடும் போது அதிசயம் காண்பது ஜெகம்!

அடுத்த edit-ல் முதலெழுத்து ஒன்றவும் மீட்டரில் சரியாக உட்காரவும் முதல் வரியை மாற்றினேன்

ஆண்டவராலே ஜெயம்
அடிக்கடி செய்யணும் ஜெபம்
அல்லேலூயா பாடும் போது அதிசயம் காண்பது ஜெகம்!