REMIX இது. ORIGINAL எது? #5
இதில் கண்டு பிடிக்க ஒன்றும் இல்லைங்க. எல்லோருக்கும் தெரிந்த பாடல் தான். மீளாற்றலூற்றுகளைப் (renewable sources of energy) போற்றும் எண்ணத்தில் எழுதியுள்ளேன்.
*****
ஆத்தாடி காற்றால(லை) காத்தாட ...
காற்றால இறகெல்லாம் கூத்தாட ....
காத்தாட அது கூத்தாட...
கொதிக்குது பூமி வேர்த்து... ஏ...
அதக் கொஞ்சம் ஆத்து ஆத்து...
கொடி மலர் மேவும் குளிர்க் காற்றும் விலகாதோ?
அது காற்றாலை இறகோடு சுழலாதோ?
விலகாதோ... வந்து சுழலாதோ?
கரியமில வாய்வாலே பல தோஷம் தான்
அதனாலே பாழாச்சு பல தேசம் தான்
இந்த பூலோகமே...எஎஎஏ ஏஏஏ...
துருவங்கள் உருகாமல்
கடல்மட்டம் உயராமல்
நகரங்கள் முழுகாமல் காப்பாற்றுவோம்..
3 comments:
குளிக்குது ரோசா நாத்து...
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து...
நல்ல முயற்சி. பாராட்டுகள்.
மிக்க நன்றி தனபாலன் & வெங்கட்
Post a Comment