Wednesday, August 25, 2010

குளமேறி வந்த மலரே

உளபோதும் இலதாகி நிலவேந்தும் கொடியாகி 
                அசைகின்ற சின்ன இடையே 
        இடைமீது குடமாட படிமீது பதமாட 
                 குளமேறி வந்த மலரே 
இளந்தென்றல் உடலாக இருபாதம் இறகான
                நடைக்கிங்கு என்ன பெயரே? 
         பெயரேதும் தெரியாத புதுநோயில் மனம்வாடித் 
                துடிக்கின்ற தெந்தன் உயிரே
ஒளிபொங்கும் விழியாலும் உருகாத மெழுகாக 
               அழகாக நின்ற சிலையே
     சிலைகூட   உளிகொண்டு உயிர்தொட்டு வதைசெய்யும்
               கலையுந்தன் கண்ணின் கலையே
பளிங்கான குளிர்தேகம் மணிமார்பில் மகிழ்வோடு 
                பதிமுத்தம் கொண்டு தினமே
     இருங்கூந்தல் இடையென்று உடலெங்கும் அணியாமல் 
                 இதழ்மீதில் என்ன நகையே? 

அக் 2000 -இல் forumhub-ல் எழுதிய பாடல் இது.     

4 comments:

தமிழ் யாளி said...

இது புது கவிதையா ?
மரபுக்கவிதையா ?
எனக்கு இலக்கணம்
தெரியாது

இந்த கவிதையில்
வரிகளுக்கு இடையே
அதிக இடைவெளி
இருப்பதால் அதன்
கவித்துவம் குறைகிறது

மோ.சி. பாலன் said...

நன்றி தமிழ் யாளி. இடைவெளிகள் நீக்கிவிட்டேன்.

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு. அபூர்வ ராகங்கள்ள கண்ணதாசன் வந்து இந்த சந்தத்துல நாகேஷிடம் கவிதை படிப்பார்...! ஆனா இதெல்லாம் படிக்கும்போது 'பூ..இவ்வளவுதானா, நாம் கூட எழுதலாமோ' என்று தோன்றும். எழுத முயற்சி செய்தால் முதல் எழுத்துக்கு மேல் ஓடாது...எனக்கு! அது சரி புன்னகை தவிர வேறில்லையா?

கௌதமன் said...

பரிமேலழகர் யாராவது இருந்தால், மேடைக்கு வரவும். அப்போதான் எனக்குப் புரியும்.