Wednesday, August 25, 2010

அப்பா-ஆலமரம்

மண்ணூன்றி மரமாய் நின்றுவிட்டேன்.

எனக்கென்று வேரும் நீரும்
கிளைகளும் இலைகளும்
பழந்தின்னும் பறவைகளும்---

ஆலமரமாய் அப்பா நாம் ஒட்டியிருந்தாலும் -
எனக்குத்தெரியும் உன்னாலாகமுடியாது
உன் கிளையில் விழுதாய் ஊஞ்சலாடிய நானாக.

3 comments:

ஸ்ரீராம். said...

அருமை.

//"எனக்குத்தெரியும் உன்னாலாகமுடியாது"//

என்னால் நீயாக முடியாது என்று வர வேண்டுமோ?

கௌதமன் said...

ஸ்ரீராம் - கவிதையை அனுபவிக்கணும், ஆராயக் கூடாது என்று சொல்வாரோ மோசி?

மோ.சி. பாலன் said...

ஸ்ரீராம்...நன்றி. அப்படியும் மாற்றலாம்.
வேறு வார்த்தைகள். ஆனாலும் பொருள் மாறாது.

தந்தை மரத்தில் மகன் ஊஞ்சல் ஆடியதுபோல் வேரூன்றிய மகனால் தந்தையை மகிழ்விக்கவும் முடியுமோ?
இது ஒரு வழிப் பாதை?