Thursday, June 25, 2009

Wednesday, June 24, 2009

உறக்கம்

மூளை

ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டிய நேரம்.

இருப்பினும் இடையிடையே வேலை செய்கிறது.

- கனவு வேலை.

இது பரவாயில்லை.

வேலை செய்யவேண்டிய போதும்

சிலநேரம் உறங்கிவிடுகிறது.

ஹூம் .......

பரவாயில்லை.

( வேறு என்ன சொல்வது ? )

மரியாதை

" இவர்களுக்குத்தான் எவ்வளவு
மரியாதை என்னிடம்!

என் கண்களை எதிர்நோக்க
ஏனிந்தக் கூச்சம் ?


என்னிடம் ஒடுங்கி
ஏனிந்த பவ்விய நடை ?


என் குரல் கேட்டதும்
ஏனிந்தச் சிலிர்ப்பு ?


எண்ணியது.......


இரவில், தெருவில், நாய் !!

குழந்தையின் பலூன்

" ஊதிவிட்டோம் பெரிதாய்.. "
குழந்தை உவகையுடன் நகைத்தால்,
வாயினின்று ஓடிப் பறக்கும்
வளி வெளியேறும். உடல் மெலிதாகும்.

கருத்துடன் தந்தை காற்றடைத்து
கயிறெடுத்துக் கட்டிக் கொடுக்கக்
குழந்தைகள் எட்டி உதைத்தாலும்
ஒழுங்காய்க் கிடக்கும்
உடையாமல் பலநேரம்.

சிறப்பாய்ப் பேணி சீரிடத்தில்
வைத்தாலும்
சிறிதாய்க் காற்றிறங்கும் சில நேரம்.

சில நேரம்
சிதறி வெடித்துவிடும்.

அம்மா

அம்மா
நான் தோள் நிமிர்ந்து நிற்பதற்குள்
உன் தோல் சுருங்கிப் போனதம்மா

தியாக ஒளியே கற்பூர தீபம் நீ
அழுகின்ற மெழுகல்ல

நீ என்னை உன்னிலிருந்து
வேராக்கி வேறாக்கியும் வேறாக்கவில்லையே

அன்னை உனைப் பாடுகையில் என் புலமை இங்கு தாழ்கிறது

அம்மா, இன்று நான் இறந்தால்
உண்மையாக அழ உன்னை விட்டால் யாரம்மா?

உயிர் தந்த தாயே,
நான் ஆணான போதும் உனக்கு அன்னையாகும் வரம் தா.