மலைமலையாய் மாம்பழங்கோ
மருந்து வச்ச மாம்பழங்கோ
பளபளக்கும் பப்பாளிங்கோ
கல்லு வச்ச பப்பாளிங்கோ
குவிச்சு வெச்ச கொய்யாங்கோ
கெமிக்கல் வெச்ச கொய்யாவுங்கோ
குலை குலையா
திராட்சைங்கோ
மருந்து தெளிச்ச
திராட்சைங்கோ
மழமழன்னு ஆப்பிளுங்கோ
மெழுகு போட்ட
ஆப்பிளுங்கோ
ஏழைக்கேத்த பழமுங்கோ
எங்க வாழைப்பழமுங்கோ
பாழும் வயிற்றைக்
கெடுக்கவே ஸ்ப்ரே
அடிச்ச பழமுங்கோ
நல்ல உணவு நாமும் தின்னு
நாப்பது வருசம் ஆச்சுங்கோ
சோத்துலயும் விஷமுங்கோ
கொழம்புலயும்
விஷமுங்கோ
கறியும்மீனும்
விஷமுங்கோ
காய்கறியும்
விஷமுங்கோ
கடைசியிலே
பாக்கப் போனா
கனிஞ்ச பழமும்
விஷமுங்கோ
விஷத்தைத் தின்னு
வாழும் மனுசன்
நல்லவனாவது
எப்படிங்கோ?
2 comments:
இன்றைய பாழும் நிலையைச் சொல்லும் கவிதை. வேதனையான உண்மை.
நன்றி வெங்கட் ��
Post a Comment