Wednesday, March 8, 2017

சுட்டுப் போட்டபோதும்


படகெடுத்துப் போனான் ஐயோ விடை கொடுத்துப் போனான்
வலை எடுத்துப் போனான் ஐயோ விலை கொடுத்துப் போனான்
மீனைத் தேடிப் போனான் ஐயோ ஊனை விட்டுப் போனான்
ஊரை விட்டுப் போனான் ஐயோ உலகை விட்டுப் போனான்
கதவு எதுவும் இல்லை ஐயோ கடலில் மதிலும் இல்லை
எல்லை மீறல் என்றான் ஐயோ இலங்கைக் காரன் சுட்டான்
நமது நாட்டின் படைகள் ஐயோ நமக்குக் காவல் இல்லை
நமது மந்திரிமார்கள் ஐயோ மதியில் நாமும் இல்லை
நிம்மதியா வாழ ஐயோ தமிழர் விதியில் இல்லை
எழவு பாட்டுப் பாடி ஐயோ எதுவும் மாற வில்லை
சுட்டுப் போட்டபோதும் ஐயோ சொரணை வருவதில்லை

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எப்போது தான் இதற்கு நல்ல தீர்வு வருமோ...?

வேதனை ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

வேதனை....

Ajai Sunilkar Joseph said...

உருக்கும் வரிகள்...