Saturday, June 15, 2013

செருப்பு


மிதித்தாலும் உதைத்தாலும்
உன் காலின் கீழ்க் கிடக்கிறேன்.
நீ கழற்றி விட்டாலும்
உனக்காகக் காத்துக் கிடக்கிறேன்

உன் வழியே என் வழி....
மலத்தின் மீது நீ நடந்தால்
நாறிப் போவது நான்...

உனது அன்புத் தெய்வங்களுக்கு
ஆகாது என்பதால்
உன் பூசை அறையில்
நான் இடம் கேட்பதில்லை.
வீட்டுக்கு உள்ளேனும் வையேன்..
வெளியில் நாய்கள் தொல்லை.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல நண்பன்...

மோ.சி. பாலன் said...

நன்றி தனபாலன்.

இது செருப்பைப் பற்றிய கவிதை மட்டுமல்ல. சிறப்பான ஒருவன் செருப்பான கதையும் கூட.

ADMIN said...

ஆம்.. செருப்பின் தியாகத்தை புரிந்துணரச் செய்யும் வரிகள்..! நன்று.

நன்றி..!!!

மோ.சி. பாலன் said...

nandri Thangam Pazhani