குடையின்றி நிற்கும்போது
திடீரென-
உன் கல கல சிரிப்பில்
எனை முழுவதும் நனைத்துப் போனாய்.
என் முரட்டு மேனியிலும் மயில் தோகையென
சிலிர்த்துக் கொண்டன மயிர்க் கால்கள்.
நீ வந்து போன நெடுநேரம் கழித்தும்
மீசையின் மீது ஒட்டிக் கிடந்தது
உன் முத்தம்.
ஒட்டிப் போன ஆடையில் ஒட்டிக்கொண்டு
பிரிக்க விடாமல் ஏன் பிடிவாதம்...?
ஒரு வழியாய் உடல் துடைத்து
புதுத் துணி அணிந்த போது
உடல் முழுதும் பூசிக் கிடந்தது
உன் ஸ்பரிசத்தின் தூய்மை.
திடீரென-
உன் கல கல சிரிப்பில்
எனை முழுவதும் நனைத்துப் போனாய்.
என் முரட்டு மேனியிலும் மயில் தோகையென
சிலிர்த்துக் கொண்டன மயிர்க் கால்கள்.
நீ வந்து போன நெடுநேரம் கழித்தும்
மீசையின் மீது ஒட்டிக் கிடந்தது
உன் முத்தம்.
ஒட்டிப் போன ஆடையில் ஒட்டிக்கொண்டு
பிரிக்க விடாமல் ஏன் பிடிவாதம்...?
ஒரு வழியாய் உடல் துடைத்து
புதுத் துணி அணிந்த போது
உடல் முழுதும் பூசிக் கிடந்தது
உன் ஸ்பரிசத்தின் தூய்மை.
6 comments:
மழைக்காதலியை காதலிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது அது போல இந்த அழகான கவிதையை ரசிக்காமல் யாரும் இருக்க முடியாது பாராட்டுக்கள்
உடல் முழுதும் பூசிக் கிடந்தது
உன் ஸ்பரிசத்தின் தூய்மை.//அப்படியோ?
அனைவருக்கும் பிடித்த காதலி...!
Just Visit : http://www.seenuguru.com/2013/06/contest-info.html
நான் கூற வந்ததை திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தன்னுடைய இரண்டாவது கருத்தாகக் கூறியுள்ளார்.
வாழ்த்துகள்!
மிக்க நன்றி - அவர்கள், கவியாழி, தனபாலன், கௌதமன்.
தனபாலன், கௌதமன் - காதல் கடிதம் போட்டியை சுட்டியமைக்கு நன்றி. கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
Post a Comment