Monday, October 11, 2010

மலையேறும் மீன்கள்

என் எழுத்துக்கள்:

தெருப்பக்கத்தில்
குழந்தை போட்ட கோலங்கள்;
அருவி நீரில் மலையேறும் மீன்கள்;
இருட்டில் தொலைத்த நாணயம் தேட
நான் பற்ற வைக்கும் தீக் குச்சிகள் ;
மரத்திலிருந்து காற்றில் உதிர்ந்தவை;
மலர்கள் பொறுக்கி மாலையாக்கிக் கொள்கிறேன்
சருகுகள்? - அடுப்பெரித்துக் கொள்கிறேன்

உங்களுக்கு எப்படி?
படித்து விட்டதால் உங்கள் வாழ்வின் பகுதியானவை;
பிடிக்காவிட்டால் ?
படித்த நேரம்  உங்கள் ஆயுள் தின்ற எமன்கள்!

2 comments:

ஸ்ரீராம். said...

ரொம்ப யோசிக்கிறீர்கள்... எங்களுக்கு நல்ல கவிதை...கீழே லேபிளில் பார்த்து வசன கவிதை, லிமரிக் என்றெல்லாம் வித்தியாசம் தெரிந்து கொள்கிறேன்.அந்த அளவு என் கவிதை அறிவு... ரசிக்க மட்டும் தெரியும்!

கௌதமன் said...

மோ சி - படமும் போட்டிருக்கலாமே! மலை ஏறும் மீன்களைப் பார்க்க ஆசை!