Saturday, November 7, 2009

THANGLISH பாடல்: ஜிஞ்சர் கார்லிக்

( சமையல் தெரியாத கணவனுக்கு  / மனைவி  அல்லது மனைவிக்கு  / கணவன் பாடும் பாடல்  
" தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ" 
-- என்ற பாடலின் ராகத்தில் அமைந்தது   ... )

ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்-ஐப் போட்டு
வதக்க வேணும்மா காய்கறி 
பெப்பருடன் சால்ட்டும் சேர்த்துக் 
கொதிக்க  வேணும்மா கோழிக்கறி  

டேஸ்ட்டு ஏதும் இல்லையின்னா 
நீயும் கொஞ்சம் சால்டைப் போடு 
சால்ட்டு ரொம்ப ஜாஸ்தியானா
மேலும் கொஞ்சம் வாட்டர் போடு   

உண்மை அம்மா குக்கிங் ரொம்ப ஈசி அம்மா 
சமைப்பது சுலபமம்மா !!   ( ஜிஞ்சர் கார்லிக் ... )     

சுகரும் இல்லையின்னா டீ-யிலே   கருப்பட்டி போடலாம்
பாலும் இல்லாமலே வெந்நீரில் கருப்பு டீ போடலாம்

சாதம் இல்லையின்னா நூல் போன்ற நூடுல்சும் செய்யலாம்
பச்சைக்  காய்களையே கட் பண்ணி ரொட்டியில் வைக்கலாம்
இப்படி விதமா விதம் விதமா சமைத்திடலாம் என் கண்ணம்மா !!  ( ஜிஞ்சர் கார்லிக் ... )

2 comments:

Gouthaman said...

சூப்பரா இருந்துது ஜின்ஜர் கார்லிக்
உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரிஞ்சுது
நீங்க வீட்டிலே சமைப்பீங்களா?

மோ.சி. பாலன் said...

thanks my dear son