நதியின் கரையில்
நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும்
குறுக்குப் பாலம் தூரத்தில் தெரிந்தது - சிறியதாய்
எங்கேயோ வேகவேகமாய்ச் செல்வதாய்ப்
பாசாங்கு செய்த நதி
நாமிருவர் பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டே வந்தது
நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும் -
குளிர்க்காற்றை நம் சுவாசங்களால் சூடாக்கி.
நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும்.
எடைகளுடன் நம் எண்ணங்களையும் சுமக்கவோ என்னவோ
குறுக்குப் பாலம் பெரிதாகிக் கொண்டே வந்தது
நதியில் ரகசியங்கள் தொலைத்து
கரையில் சிரிப்பொலிகள் தொலைத்து
நிலவில் பகல் தொலைத்து - நாம் விடைபெறும் நேரம்
பற்றிய உன்கரம் காற்றில் தொலைத்து -
கடந்து போனது ஞாபகமிருக்கிறது
-பாலம்-
உடைந்துமா போனது நாம் கடந்ததும் ?
No comments:
Post a Comment