கவிஞர் தாமரை, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் பாடகி மதுஶ்ரீ மூவருக்கும் பெரிய ஓ
மல்லிப்பூ பாடல் பல வருடங்களுக்குப் பிறகு நான் ரிப்பீட் மோடில் கேட்கும் பாடல். (நியூயார்க் நகரம் தந்த அதே ஏக்கம் இந்தப் பாடலிலும் கிடைக்கிறது)
மதுஶ்ரீ அவர்களின் தமிழ் உச்சரிப்பு பற்றி சில விமர்சனங்கள் எனக்கும் உண்டு. ஆனால் குரல் மயக்கத்தைக் குறை கூற முடியவில்லை.
தாமரை அவர்களின் பதிவில் "வாளியை சேந்துறேன் தண்ணியக் காணோம்" என்று படித்துவிட்டு, பாடலில் "வாளியை சிந்துறேன் தண்ணிய காணோம்" என்று கேட்கும் போது முதலில் வருத்தமாக இருந்தது.
ஆனால் காதல் மயக்கத்தில் வெற்றுவாளியைத் தான் சேந்துவாளா பெண்? சேந்திய தண்ணியை ஆட்டி ஆட்டி சிந்திவிடுவதும் காதல் மயக்கம் தானே?!
2 comments:
சரிதான்... (!)
நன்றி தனபாலன்
Post a Comment