Tuesday, July 9, 2019

யாருக்காக இது யாருக்காக?

யாருக்காக இது யாருக்காக?
எங்கள் காவிரி அகண்ட காவிரி
நீரும் இன்றியே வறண்ட காவிரி
யாருக்காக இது யாருக்காக?
தாகமே போ... போ....
மேகமே வா.... வா....

மலைகள் மீது மழை பொழிந்தது
அது அருவியாகி அழகு தந்தது
சொர்க்கமாக நதியும் பாய்ந்தது
இன்று நரகமாகக் காய்ந்து விட்டது

மலர்கள் தானே நாம் வளர்த்தது
அந்த மலர்கள் இன்று ஏன் உதிர்ந்தது?
குயில்கள் தானே நாம் ரசித்தது
அந்தப் பறவை இன்று ஏன் மறைந்தது?

எழுதுங்கள் நதிநீர் சாசனத்தில்
நதிகள் பூமியின் உடைமை என்று
பாடுங்கள் உலகம் முழுதும் சென்று
உழவு மானிடக் கடமையென்று

உழவு செய்து நாம் பிழைத்தது
அந்த உழவு இன்று ஏன் கசந்தது?
பயிர்கள் காய்ந்து நாம் தவிப்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது

தொன்றுதொட்டு இங்கு வந்தது
அதில் என்றிருந்து பங்கு வந்தது?
அங்கிருந்து ஆட்சி செய்பவர்
தினம் ஆடுகின்ற நாடகம் இது

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனைப்படவேண்டிய உண்மை...

கௌதமன் said...

நன்று சொன்னீர் மோ சி பா!

மோ.சி. பாலன் said...

நன்றி கௌதம் ஜி

மோ.சி. பாலன் said...

காலம் மாறும் என நம்புவோம்