Monday, February 27, 2017

இலவு காக்கும் தமிழா

மொழியைக் காக்க மறந்தாய் - உன்
விழியைக் காக்க மறந்தாய்
இரவு காக்கும் தமிழா - நீ
விடியல் காண மறந்தாய்

உறவு காக்க மறந்தாய் - உன்
உரிமை காக்க மறந்தாய்
நரிகள் காக்கும் தமிழா - நீ
நெறிகள் காக்க மறந்தாய்

எழில்கள் காக்க மறந்தாய் - உன்
தழல்கள் காக்க மறந்தாய்
விழல்கள் காக்கும் தமிழா - நீ
தொழில்கள் காக்க மறந்தாய்

குலத்தைக் காக்க மறந்தாய் - உன்
நிலத்தைக் காக்க மறந்தாய்
இலவு காக்கும் தமிழா - நீ
உழவு காக்க மறந்தாய்

நதிகள் காக்க மறந்தாய் - உன்
நிதிகள் காக்க மறந்தாய்
நொதிகள் காக்கும் தமிழா - நீ
விதிகள் மாற்ற மறந்தாய்

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

தமிழனின் நிலை சொல்லும் கவிதை..... நன்று.

நம் நிலை நினைத்தால் வேதனை தான்.....

மோ.சி. பாலன் said...

பெரும் வேதனை வெங்கட்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மையை நிலையைச் சொன்ன விதம் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் வருந்துகிறது....

மோ.சி. பாலன் said...

நன்றி ஜம்புலிங்கம் ஐயா, தனபாலன்