புத்தி உள்ள மனிதன் எவனும் வட்டிக்கு வாங்குவதில்லை
வட்டி நிறைய கட்டும் மனிதன் புத்திசாலி இல்லை
பணம் இருக்கும் மனிதனிடம் கடன் இருப்பதில்லை
கடன் இருக்கும் மனிதனிடம் பணமும் சேர்வதில்லை
கடமை என்ற பெயரினிலே கடனை வாங்கிக் குவிப்பான்
கௌரவத்தின் பெயரினிலே மானத்தையே இழப்பான்
அவசரத்தில் வாங்கும் கடனை அவசியமாய் நினைப்பான்
அலட்சியத்தால் அதிக வட்டிப் புதைகுழியில் நடப்பான்
ராப்பகலாய் அவன் உழைப்பான் வியர்வையிலே குளிப்பான்
ஆப்படித்து வால் நுழைத்த குரங்கைப் போல முழிப்பான்
நல்லவர்கள் கொடுக்கும் கடனை நாமம் போட நினைப்பான்
பொறுக்கியிடம் வாங்கும் கடனைப் பொறுப்புடனே அடைப்பான்
கருப்புப்பண முதலைக்குத்தான் கறிசோறு படைப்பான்
கழுத்தை நீட்டி வந்தவளைப் பட்டினி போட்டுப் படுப்பான்

9 comments:
பாட முடிகிறது!
நல்ல பாடல். ரசித்தேன்.
அட...! நல்லாயிருக்குங்க....
மிக்க நன்றி ஸ்ரீராம், வெங்கட், தனபாலன்
உண்மை
வணக்கம்
வரிகள் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
தமிழ் வலைப்பதிவகம் வழியாக தங்களின் தளத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நான் http://drbjambulingam.blogspot.com/ மற்றும் http://ponnibuddha.blogspot.com/ என்ற தளங்களில் எழுதி வருகிறேன். இங்குதான் புத்தியுள்ளவர்களைத்தேட வேண்டியுள்ளதே.
மிக்க நன்றி ரமேஷ், ரூபன்
மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா. தங்கள் பதிவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. அவற்றினின்று கற்பேன்.
Post a Comment