Friday, November 6, 2015

தீபாவளி நல்வாழ்த்துகள்

அதிரசம்போல் மின்னிடுமே
எண்ணெய் தேய்த்த மேனி
அடுக்கடுக்காய் முறுக்கு தட்டை
அடித்து நொறுக்கத் தீனி
தீபாவளி மருந்து சாப்பிட்டும்
விருந்து சாப்பிடலாம்
விருந்து சாப்பிட்டும்
மருந்து சாப்பிடலாம்
வெடிக்கின்ற வெடிகள்
வெற்றி முரசு கொட்டும்
வெடிக்காத வெற்று வேட்டும்
தோல்வி பழக வைக்கும்
மத்தாப்போ கம்பியோ
எதையாவது பற்றவைப்பதென்பது
யாருக்குத்தான் பிடிக்காது?!
ஏற்றிவைத்த தீபம் நமது
இல்லம் கோயிலாக்கும்
ஏற்றிவைத்த புன்னகையும்
இதழ்களை எழிலாக்கும்
புத்தாடை புதுப் படம்
குறைவிலாக் கொண்டாட்டம்
நரகாசுரன் என்பதெல்லாம்
நமுத்துப்போன காரணம்
பண்டிகைகள் வாழ்வதற்கு
கொண்டாட்டமே காரணம்
கொண்டாட்டமாய் வாழ்வதற்கு
பண்டிகைகளே காரணம்!

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
அன்புடன் பாலா சிவசங்கரன்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// ஏற்றிவைத்த புன்னகையும்
இதழ்களை எழிலாக்கும் //

ஆகா...! வாழ்த்துகள்...

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி தனபாலன், நாகேந்திர பாரதி