Saturday, October 26, 2013

விநாயகா நின்னு வினா ப்ரோச்சுடகு

நானும் என் மகனும் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் மேற்படி கீர்த்தனையைப் பின்பற்றி கீழ்க்கண்ட பாடலை எழுதியுள்ளேன். இது நேரடி மொழிபெயர்ப்பன்று. கீர்த்தனையின் பொருளும் எனக்குத் தெரியாது. இந்தத் தமிழ் வடிவம் எவ்வாறு உள்ளது என்று உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

விநாயகா நின்னை
வினாடியும் மறவேன்
வீரம் அருள்வாய்
வெற்றி தருவாய்

அனாதை இல்லை நான்
நீயே காப்பாய்
ஆதரித்து என்னை
நல்லிடம் சேர்ப்பாய்

பரமேச நேச பார்வதி புதல்வா
பாலசுப்ரமண்யன் பாடலில் முதல்வா
கரி முக கண நாயகா
கரி முக கண நாயகா
கரி முக கண நாயக குண நாதா

காதலோடு என்னைக்
காவல் செய் வா வா

விநாயகா நின்னை
வினாடியும் மறவேன்
வீரம் அருள்வாய்
வெற்றி தருவாய்

6 comments:

கௌதமன் said...

ஆஹா அற்புதம்!

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமையாக இருக்கிறது... பாராட்டுக்கள்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இக் கீர்த்தனையின் பொருள் தெரியாதே இது வரை கேட்டேன். ஆனால் உங்கள் பொழிபெயர்ப்பு மிகப் பொருத்தமாகவும், ராகத்தின் சாயலிலும் பொருந்துகிறது.
இப்பாடல் ரி.எம்.கிருஸ்ணா பாடியது யூடுயூப்பில் கேட்டதாக ஞாபகம். இத்துடன் இக் கீர்த்தனை இணைப்பையும் கொடுப்பதுடன்.
ராக தாளம் பற்றியும் குறிப்பிடவும்.
அருமை,
ஆர்வம் குறையாது இருவரும் கற்றுத் தேறவும்.

மோ.சி. பாலன் said...

நன்றி கௌதமன், தனபாலன், யோகன்.

யோகன்,
இது ஹம்சத்வனி ராகம் ஆதி தாளம். நானும் இப்பாடலை you tube-ல் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடியதைக் கேட்டிருக்கிறேன். மற்றபடி கீர்த்தனைகள் இருக்கும் மற்ற இணைய தளங்கள் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. மிகவும் ஆரம்ப நிலை மாணவர்கள்தான் நானும் என் மகனும். தமிழார்வத்தில் இப்பாடலை எழுதி இங்கு பதிவிட்டேன். அவ்வளவே.

Yaathoramani.blogspot.com said...

அந்தப் பாடல் எனக்குத் தெரியுமாதலால்
ராகத்தோடு தங்கள் கீர்த்தனையையும்
பாடிப்பார்த்தேன்,அற்புதம்
தொடர வாழ்த்துக்கள்

மோ.சி. பாலன் said...

நன்றி ரமணி ஐயா