Tuesday, July 30, 2013

UKG பிரார்த்தனை

எனது நண்பரின் மகன் UKG படிக்கிறான். அவன் LKG படிக்கும்போது "குரு பிரம்மா .. குரு விஷ்ணு" என்ற பாடலைப் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எந்தக் கோயிலுக்குப் போனாலும் சாமியின் முன் நிற்கும்போது இந்தப் பாடலை சத்தமாகப் பாடுவது அவன் வழக்கமாம். பலரும் குழந்தை பாடுவதைப் பாராட்டுவார்களாம். இந்த வார இறுதி நண்பர் குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றிருக்கிறார். கடவுளின் முன் கை கூப்பிய சிறுவன் சத்தமாகப் பாடத் துவங்கினான்.. "அறம் செய விரும்பு ஆறுவது சினம் இயல்வது கரவேல் ஈவது விலக்கேல்..." எல்லோர் முன்னாலும் வெட்கமாகிவிட்டது நண்பருக்கு..இந்த நான்கு வரிகளுக்குள் அவன் பாடலை நிறுத்திய நண்பர், "கண்ணா இது சாமி பாட்டு இல்லப்பா" என்றாராம். "எங்க miss புதுசா சொல்லிக் குடுத்தாங்கப்பா.. நான் சாமி பாட்டுன்னு நெனச்சுட்டேன்.. இது என்ன பாட்டுப்பா?" என்றானாம் குழந்தை. எனக்கென்னவோ இந்த நான்கு வரிகளும் இறைவன் முன் வைக்க வேண்டிய சரியான வேண்டுதல்களாகவே தோன்றுகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

6 comments:

துளசி கோபால் said...

உண்மையான வேண்டுதல்கள் இவையே!

Avargal Unmaigal said...

கடவுளின் முன்னால் சினிமா பாடலை பாடாமல் இந்த பாடலையாவது பாடினானே என்று அவனை பாராட்ட வேண்டியதுதான்

திண்டுக்கல் தனபாலன் said...

இதை விட சிறந்த பாடல் ஏது...? நண்பரின் மகனுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

கீதமஞ்சரி said...

கடவுளைத் துதிப்பதும் மனிதத்தை மதிப்பதும் ஒன்றே என்று குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது போலும். சிறப்பான பகிர்வு.

மோ.சி. பாலன் said...

துளசி கோபால், அவர்கள், தனபாலன், கீதமஞ்சரி,
மிக்க நன்றி.