Saturday, July 20, 2013

வாலி

வாலி...

முடிவில்லாத பாதையில்

உனது பயணம் முடிந்தது.



சயனித்தது உனது உடல்

பயணித்தது உனது உயிர் - என்றாலும்

மௌனிக்காதது உனது மொழி.



கான்கிரீட் தரையில் படிந்த

கால் தடங்களாய்

ஆயிரம் ஆயிரம் பாடல்கள் தந்தவேனே.

உனது மீளாத் துயிலுக்கு

நான் பாடும் தாலாட்டு-

லாலி.. லாலி.. வாலி.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் பாடல் வரிகளால் மனதில் வாழ்வார்...

Unknown said...

என்று அவர் நம் நினைவில் இருப்பார்

தனிமரம் said...

அவர் புகழ் என்றும் வாழும்!

மோ.சி. பாலன் said...

நன்றி தனபாலன், சக்கரகட்டி, தனிமரம்

கௌதமன் said...

R I P Vaali.