கொஞ்சி முத்தமிட
குழந்தைகளும் கூட இல்லை
நெஞ்சு மேல் நடை பயிலும்
பிஞ்சுக் கால்கள் இங்கு இல்லை
கஞ்சித் தண்ணி ஊத்திவிட
உன் கைக்கரண்டி இங்கு இல்லை
சர்க்கரை இருக்குதடி சகியே
கரும்புக்கழி நீயில்லையே
உன் சங்கேத பாஷை போல
இங்கே சங்கீதம் இனிக்கலையே
பஞ்சு மெத்தையிலே படுத்தால்
பக்கத்திலே நீயில்லையே
நஞ்சு போல் போகுதடி நேரம்
என்னைத் துருப்பிடிக்க வைக்குது இந்த தூரம்
4 comments:
பிரிவு சிரமம் தான்...
பிரிவுத் துயர் சொல்லும் கவிதை
மிக மிக அருமை
வாழ்த்துக்கள்
மனதில் சற்று கனம் கூட்டுகிறது கவிதை
அதன் உள்ளார்ந்த பொருள்..
எம்முள் விழிநீர் வழிந்த்டச் செய்கிறது...
இப்படியான சூழல் துருப்பிடித்த பொழுது
என்பது நிதர்சனமே...
மிக்க நன்றி தனபாலன், ரமணி, மகேந்திரன்
Post a Comment