நிகழ்ச்சியின் பெயர் திருமண வரவேற்பு.
நிகழ்ந்தது என்னவோ பெண்களின் அழகுப் போட்டி.
கணவர்களின் பொருளீட்டும் திறனைப்
பறைசாற்றும் நவநாகரிக நகைகள் ஒருபுறம்.
பிறந்தவீட்டின் பெருமையைப் போற்றும்
பாரம்பரிய நகைகள் ஒருபுறம்.
பரஸ்பர விசாரிப்புப் பேட்டிகளில்
ஒளிந்திருந்தன போட்டிகள்.
பட்டுப் புடவைகளில் நடந்தது - பார்டர் போர்.
ஜாக்கெட்டுகளிலும் ஜன்னல் போர்.
செயற்கைப் போர்களின் இறுதியில்
வென்றது என்னவோ இயற்கையே-
பெண்களின் கூந்தலில் சீருடையாய் மல்லிகை.
5 comments:
வென்றது என்னவோ இயற்கையே-
பெண்களின் கூந்தலில் சீருடையாய் மல்லிகை. //
அருமை அருமை
அலங்கார வண்ண விளக்குகளிடையில்
குத்துவிளக்கு போல
நிச்சயம் ஆயிரம் பகட்டுகள் சேர்ந்தாலும்
ஒரு இயற்கைக்கு ஈடாகுமா ?
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்
இன்றைய நிலைமை வரிகள்.என்னதான் பணம் குவிந்தாலும் இயற்கையை வெல்ல வழியே இல்லை !
ஆஹா சூப்பர்!
மிகவும் ரசித்த வரி:
பட்டுப் புடவைகளில் நடந்தது - பார்டர் போர்.
ரமணி, ஹேமா, கௌதமன் மூவருக்கும் என் நன்றிகள்.
Post a Comment