மயிலேறி வருவான் குகன் -கயிலை
மலையாளும் மன்னன் மகன் - மடல்விரி (மயிலேறி)
காலையில் கதிராக
மாலையில் மதியாக
வேலனவன் கோல எழில்
ஞாலத்தின் ஒளியாக
எந்தன் மன இருளது விலகிட
கந்தன் அவன் சுடர்விழி அருள்தர
பொங்கும் செங்கதிரென விடிந்திட (மயிலேறி)
பாடிடும் பொருளாக
பாடலின் பொருளாக
பார்முழுதும் பக்தர் உள்ளம்
நாடிடும் பொருளாக
இன்பம் அவன் அடியவர் வசமுற
இன்னல் பனித்துளியென விலகிட
மின்னல் அவன் விரைவென வழிவிட (மயிலேறி)
கோயிலில் சிலையாக
ஆழியில் அலையாக
நாடி வரும் சீடர் உயிர்
நாடியில் நிலையாக
கொஞ்சும் அருந்தமிழென சுவையுற
கொஞ்சம் அருமருந்தென பிணியற
நெஞ்சம் அதில் நினைவென நிலைபெற (மயிலேறி)
மலையாளும் மன்னன் மகன் - மடல்விரி (மயிலேறி)
காலையில் கதிராக
மாலையில் மதியாக
வேலனவன் கோல எழில்
ஞாலத்தின் ஒளியாக
எந்தன் மன இருளது விலகிட
கந்தன் அவன் சுடர்விழி அருள்தர
பொங்கும் செங்கதிரென விடிந்திட (மயிலேறி)
பாடிடும் பொருளாக
பாடலின் பொருளாக
பார்முழுதும் பக்தர் உள்ளம்
நாடிடும் பொருளாக
இன்பம் அவன் அடியவர் வசமுற
இன்னல் பனித்துளியென விலகிட
மின்னல் அவன் விரைவென வழிவிட (மயிலேறி)
கோயிலில் சிலையாக
ஆழியில் அலையாக
நாடி வரும் சீடர் உயிர்
நாடியில் நிலையாக
கொஞ்சும் அருந்தமிழென சுவையுற
கொஞ்சம் அருமருந்தென பிணியற
நெஞ்சம் அதில் நினைவென நிலைபெற (மயிலேறி)
1 comment:
நன்று.
இப்போது எனக்கு நினைவுக்கு வரும் பாடல் "நிழலாக வரவேண்டும் முருகா...." என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்...சும்மா ஞாபகம் வந்தது!
Post a Comment