Tuesday, September 28, 2010

சிட்டுக் குருவிக்கென்ன தட்டுப்பாடு?

"எங்கள் ப்ளாக்"-இன் கீழ்க்கண்ட பதிவில் சிட்டுக் குருவிகள் அழிந்து வருவது எதனால்? அதைத் தடுக்கக் கூடுகள் கட்டி எப்படிக்  காப்பாற்றலாம் என்று பதிந்துள்ளனர். அவசியம் படித்து ஒரு குருவிக் கூடு கட்ட வேண்டுகிறேன்.  http://engalblog.blogspot.com/2010/09/blog-post_27.html

வேண்டுகோளாக ஒரு மறுகலப்புப் பாடல் (remix)

பல்லவி 1
சிட்டுக் குருவிக்கென்ன தட்டுப்பாடு?
செல்லமே கூடு ஒன்று கட்டிப்போடு
பறந்து திரிந்து பசிக்கும் அதற்கு
உணவு தானியம் தட்டில் போடு

சரணம்1
தரையில் படரும் கொடியே.. உன்னை எடுத்தது யார்?
தேரில் தொடுத்தது யார்?
குளிரில் உறையும் மயிலே.. உந்தன் தோகைக்கும் மேல்
போர்வை கொடுத்தது யார்?

அன்று மனிதன் அன்பில் வாழ்ந்தான்
உயிர்கள் வாழ வள்ளலானான்
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா

சரணம்2
சிதறி விழும் நெல் மணிகள்
பல உயிர்களுக்கும் மனிதன்
படையல் இட்டான்

பரவி எங்கும் மரங்கள்
வழியில் வீதி வைத்தான்
விலகி வீடும் வைத்தான்
உறவுக்காக வீடு செய்தோம்
குருவிக்காக கூடு செய்வோம்
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா

பல்லவி 2
சிட்டுக் குருவிக்கென்ன தட்டுப்பாடு?
செல்லமே கூடு ஒன்று கட்டிப்போடு
உலகம் முழுதும் திரிந்து பறந்து
உறங்கவே ஒரு தொட்டில் போடு..

2 comments:

கௌதமன் said...

வழக்கம்போல கலக்கிட்டீங்க மோ சி.
முன்னொருகாலத்தில் நாம் எண்ணூர் 'கடல் அரிப்பு' குறித்து புதுக்கவிதைகள் புனைந்தது ஞாபகம் வந்தது. ஹைக்கூ எழுதினோமோ?

ஸ்ரீராம். said...

மாற்றி எழுதும் பாடலில் கலக்கிட்டீங்க.. ஆனால் நீங்கலாக எழுதும் கவிதைகள் இதை விட சூப்பர்...