"எங்கள் ப்ளாக்"-இன் கீழ்க்கண்ட பதிவில் சிட்டுக் குருவிகள் அழிந்து வருவது எதனால்? அதைத் தடுக்கக் கூடுகள் கட்டி எப்படிக் காப்பாற்றலாம் என்று பதிந்துள்ளனர். அவசியம் படித்து ஒரு குருவிக் கூடு கட்ட வேண்டுகிறேன். http://engalblog.blogspot.com/2010/09/blog-post_27.html
வேண்டுகோளாக ஒரு மறுகலப்புப் பாடல் (remix)
பல்லவி 1
சிட்டுக் குருவிக்கென்ன தட்டுப்பாடு?
செல்லமே கூடு ஒன்று கட்டிப்போடு
பறந்து திரிந்து பசிக்கும் அதற்கு
உணவு தானியம் தட்டில் போடு
சரணம்1
தரையில் படரும் கொடியே.. உன்னை எடுத்தது யார்?
தேரில் தொடுத்தது யார்?
குளிரில் உறையும் மயிலே.. உந்தன் தோகைக்கும் மேல்
போர்வை கொடுத்தது யார்?
அன்று மனிதன் அன்பில் வாழ்ந்தான்
உயிர்கள் வாழ வள்ளலானான்
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா
சரணம்2
சிதறி விழும் நெல் மணிகள்
பல உயிர்களுக்கும் மனிதன்
படையல் இட்டான்
பரவி எங்கும் மரங்கள்
வழியில் வீதி வைத்தான்
விலகி வீடும் வைத்தான்
உறவுக்காக வீடு செய்தோம்
குருவிக்காக கூடு செய்வோம்
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா
பல்லவி 2
சிட்டுக் குருவிக்கென்ன தட்டுப்பாடு?
செல்லமே கூடு ஒன்று கட்டிப்போடு
உலகம் முழுதும் திரிந்து பறந்து
உறங்கவே ஒரு தொட்டில் போடு..
Tuesday, September 28, 2010
Friday, September 17, 2010
இளையராஜா விருது பெற்றதற்கு வாழ்த்து
பழசிராஜாவுக்கு விருது பெற்றாலும் ராஜா என்றுமே இளையராஜா தான். அவருக்கு வாழ்த்து வெண்பா இதோ:
அசைபோடும் உள்ளம் மடைவிட்ட வெள்ளம்
திசையெட்டும் தன்மெட்டில் எட்டும் - இறைவன்
இசைத்தட்டில் வைத்த இனிப்புகள் என்றும்
இசைந்திட்டோர் நெஞ்சில் நிலை
நிழல்கள் படப்பாடல் தழுவி வேறொரு வாழ்த்து இதோ:
மடை திறந்து தாவும் நதியலைதான்
மனம் திறந்து கூவும் சிறுகுயில் தான்
இசைஞானி - அவர் பாடல்கள் ஆயிரம்
இசைத்தது நிலைத்தது
ராகம் பிறந்தது ரசிகர் கண் பனித்தது
ராஜா பிறந்ததால் நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே அவர் தான் இறைவனே
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
அவர்க்கே தான் !
அசைபோடும் உள்ளம் மடைவிட்ட வெள்ளம்
திசையெட்டும் தன்மெட்டில் எட்டும் - இறைவன்
இசைத்தட்டில் வைத்த இனிப்புகள் என்றும்
இசைந்திட்டோர் நெஞ்சில் நிலை
நிழல்கள் படப்பாடல் தழுவி வேறொரு வாழ்த்து இதோ:
மடை திறந்து தாவும் நதியலைதான்
மனம் திறந்து கூவும் சிறுகுயில் தான்
இசைஞானி - அவர் பாடல்கள் ஆயிரம்
இசைத்தது நிலைத்தது
ராகம் பிறந்தது ரசிகர் கண் பனித்தது
ராஜா பிறந்ததால் நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே அவர் தான் இறைவனே
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
அவர்க்கே தான் !
Labels:
கவிதை,
மரபுக் கவிதைகள்,
வாழ்த்து
Thursday, September 9, 2010
ரமலான் வாழ்த்துக்கள்
இளம்பிறையாய்த் தோன்றும்
இறையருள்
முழு மதியாய் வளர்ந்தோங்க
ரமலான் திருநாள்
நல்வாழ்த்துக்கள்
இறையருள்
முழு மதியாய் வளர்ந்தோங்க
ரமலான் திருநாள்
நல்வாழ்த்துக்கள்
Wednesday, September 1, 2010
காண்டீபன்
கையில் வில்லில்லாக் காண்டீபன்
கடையில் வாங்கித்தின்றான் கண்ட டிபன்
ராத்திரியில் அடிக்கடி கண்விழிச்சான்
பாத்ரூமில் பாதி இரவு கழிச்சான்
இன்னும் கொஞ்ச நாளைக்கு வெறும் "டீ, பன்"
கடையில் வாங்கித்தின்றான் கண்ட டிபன்
ராத்திரியில் அடிக்கடி கண்விழிச்சான்
பாத்ரூமில் பாதி இரவு கழிச்சான்
இன்னும் கொஞ்ச நாளைக்கு வெறும் "டீ, பன்"
Subscribe to:
Posts (Atom)