ஒரு வெங்கலப் பானைக்குள்ளே
வெண்பொங்கலும் வேகையிலே....!
அந்த சந்தடிச் சாக்கினிலே
இங்கு முந்திரி காணலையே
கடைக்குச் சென்று முந்திரியை வாங்கிடும் வேளையிலே
பருப்பும் வெந்து பொங்கலும் தான் குழையுது பானையிலே
சொந்த பந்தம் வாரீரோ
சுடும் பொங்கல் உண்ண வாரீரோ..?!
நாட்டுப் பசு நான் கறந்து
பாலைக் காய்ச்சித் தானே நெய் எடுத்தேன்; நெய் எடுத்தேன்
நானெடுத்த நெய்யினிலே நாலு அஞ்சு ஸ்பூனை நானும் விட்டேன்
நானும் விட்டேன்
அம்மாடி தாளிப்பின் வாசம் இங்கே நாசியை விட்டு நீங்கிடுமோ?
அஞ்சாறு மணிநேரம் நெய்யின் வாசம் நாவினை விட்டு நீங்கிடுமோ?
கொதிக்கின்ற பொங்கல் விரைவில் ஆறாதோ?
ருசிக்கின்ற பெண்கள் விரலும் நோகாதோ?
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
நிழலைப்போலே உள்ள மிளகை மென்று பாரு காரத்தெ காரத்தெ!
2 comments:
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே...
Yes Killergee!!! Thank you
Post a Comment