Wednesday, March 18, 2020

நாவல் கரோனா - REMIX

நாவல் கரோனா - REMIX
(காதல் பிசாசே பாடல் மெட்டு)

நாவல் கரோனா
நாவல் கரோனா
வேணாம் வராதே பரவாயில்லை
நாவல் கரோனா
நாவல் கரோனா
போதும் அவஸ்தைகள் பரவாயில்லை
சீனாவும் சுகமாயில்லை
ஈரானும் நலமாயில்லை
இந்தியாவை விட்டுவிட்டால் பரவாயில்லை
அமெரிக்கா பரவாயில்லை
ஐரோப்பா சரியாயில்லை
எங்களை நீ விட்டுவைத்தால் பரவாயில்லை

கொஞ்சம் ஒதுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
கைகள் கழுவல் தூய்மை பழகல்
சொல்லிக் கொடுத்தாய் நீநீநீ
ஐயோ அம்மம்மா நான் யாரோடும்
பேசாத வெட்கத்தை நீயே தந்தாய்
அப்பா அப்பப்பா நான் யார் மீதும் மோதாத சங்கோஜம் நீயே தந்தாய்
இது போதும் விட்டுச் செல்லு
தாங்காது சொன்னா கேளு
மருந்தொன்று கண்டுபிடித்தால் பரவாயில்லை

4 comments:

KILLERGEE Devakottai said...

பாடல் வரிகள் நன்று
ஆனால் வாட்சப்பில் வரும் காணொளிகளை காணும்போது ரசிக்கும் சூழல் இல்லை நண்பரே...

வெங்கட் நாகராஜ் said...

விரைவில் இப்பேரிடரிலிருந்து மீள்வோம்.

மோ.சி. பாலன் said...

மிகவும் உண்மை

மோ.சி. பாலன் said...

நல்லதே நடக்கும்