Thursday, August 9, 2012

வள்ளல்

தடம் படர்ந்த முல்லைக்குப்
பரி நீக்கித் தேர் தந்த பாரி;
பனி படர்ந்த மயிலுக்கு
ஜரி வைத்த போர்வை தந்த பேகன்;
மாயவனின் மர்மம் அறிந்தும்
தர்ம பலன் தர்மம் செய்த கர்ணன்;
ஆடவரில் வள்ளல்கள் இவர்போல் பலருண்டு.

பார்வையில் உறவு தந்து,
ஸ்பரிசத்தில் உரிமை தந்து,
உள் வளரும் குழந்தைக்கு
உடலோடு உயிரும் தந்து,
மார் கசியப் பால் ஊட்டி,
வெறும் காம்பில் அன்பூட்டும்
பெண்களில்
வள்ளல் என்று தனியாய் யாருமில்லை.

5 comments:

கீதமஞ்சரி said...

பெண்மை போற்றும் கவிதைக்கு வந்தனம். பாராட்டுகள் மோ.சி.பாலன்.

மோ.சி. பாலன் said...

கீதமஞ்சரி, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

ஹேமா said...

சிந்தனைக்குப் பாராட்டுக்கள் பாலன் !

கௌதமன் said...

சாரி நான் கொஞ்சம் லேட்டு.
உடல் நிலை சரியில்லை,
கம்பியூட்டருக்கும் எனக்கும்!
இப்போ சரியாயிடுச்சு, எனக்கு!
நல்ல கவிதை, வாழ்த்துகள்.

மோ.சி. பாலன் said...

நன்றி ஹேமா, கௌதமன் - விரைவில் உடல் நலம்பெற வேண்டுகிறேன்.