Showing posts with label வெண்பா. Show all posts
Showing posts with label வெண்பா. Show all posts

Monday, August 19, 2019

வாட்சாப் அதிகாரம்


1.
அகர முதல எழுத்தெல்லாம் அன்று!இன்று
வாட்சாப் முதற்றே உலகு
2.
வேண்டுதல் வேண்டா எலாமுள்ள வாட்சாப்பை
யாண்டும் நோண்டார் இலர்
3.
எப்பொருள் வாட்சாப்வாய் கேட்பினும் அப்பொருள்
கப்சாவா வென்றாய்ந் துணர்
4.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் வாட்சாப் கருமமே கட்டளைக் கல்
5.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையவாட் சாப்
6.
உழைப்பதற்கு இல்லாத நேரம் சிறிதளவு
வாட்சாப்க்கும் ஈயப் படும்
7.
இனிய உளவாக இன்னாத கூறிவிட்டு
சாந்துணையும் சச்சரவு ஏன்?
8.
பீலிபெய் வாட்சாப்பும் போரடிக்கும் பார்வர்ட்கள்
சால மிகுத்துப் பெயின்
9.
மோப்பக் குழையும் அனிச்சம் தலைகுனிந்து
நோக்கக் குழையும் கழுத்து
10.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்குக்
கேடாகும் வாட்சாப் சுவை

Friday, January 8, 2016

பசுவும் மனிதனும்

கன்று மறந்து கறந்தோர்க்கு பால்தரும்
தின்று செரிக்காத புல்லை அசைபோடும்
துஞ்சிடும் போதிலும் கொம்பின் சுமையோடு
நெஞ்சில் பசுந்தாள் நினைப்பு





விளக்கம்:
1 கடமை மறந்து அடங்கி உழைக்கும்
2 அற்ப நினைவுகளை(புல்லை) அசைபோடும்
3 உறங்கும்போதும் உறவின்(கொம்பு) சுமை
4 உறங்கும்போதும் பசுந்தாள்(புல்/பணத்தாள்) நினைப்பு

Wednesday, April 25, 2012

கோடை மழை - அரசு அதிகாரி

முரசாய் இடித்து மின்னலாய் வெட்டி
பரபரத் தாலும் துளிநனை யாமல்
வரவேற்பு நாடியே வேனில் வருவர்
அரசதி காரி மழை

Saturday, April 7, 2012

மனிதனும் பாம்பும் - சிலேடை

பண்ணிசை நாடும் படமெடுத்து ஆடிடும்
கொண்டவுடை மாற்றும் - புறமுதுகு பாராது
எண்ணிய தன்இணை இன்முகம் பார்த்துடல்
பின்னும் அரவாம் நரன்

Tuesday, November 30, 2010

மண்புழு

தார்ச் சாலையில் மண்புழு
பிட்டுக்கு மண்சுமந்தான் முக்கண்ணன் - மூவடியில்
எட்டி உலகளந்தான் மால்வண்ணன் - பூவுலகில்
துட்டுக்கு மாந்தர் அலைந்து அளந்து-கை
விட்டமண் தேடும் புழு

Friday, November 19, 2010

கார்த்திகை தீபம்

திருவாய் திறந்து மணிகள் ஒலிக்கத்
திருநாள் அறிந்து திசைகள் சொலிக்கத்
திருமகள் சூடும் மணியாகும் - தீபத்
திருவிழா சூழும் சுடர் 

அருவாய்த் தகிக்கும் தணலில் லர்ந்து
உருவாய்த் திகைக்கும் ஒளியில் மிளிர்ந்து
தருவாய்த் தழைத்துத் தரணி நிறைக்கும்
இருளில் அகலால் பகல்

கருணை மழையைப் பொழிந்திட வானில்
வருணன் கடலை அழைத்திடத் தேரில்
அருணன் வரவழி காட்டும் விளக்கே
அருணை மலையில் மலர் 

அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்  

Sunday, October 31, 2010

கனவு வேலை


ஒரே கருத்து  -  இரண்டு வடிவங்களில் : 

கனவு வேலை (லிமரிக்)


மதிய இடைவேளையில் அடிப்பது அரட்டை
மற்ற இடைவெளிகளில் படிப்பது இன்டர்நெட்டை
தேடியதோ கனவு வேலை
செய்வதோ தூங்கும் வேலை
அலாரமாய் வைப்பதோ தன்னுடைய குறட்டை !!

இரு(க்)கைச் சயனம் (வெண்பா)

கயல்போல் விழிகள் இரவில் உறங்கி
அயராது மீண்டும் துயில்வதும் ஏனோ?
சயனம் செயவோ பணியில் இரு(க்)கை?
வியப்புன் குறட்டை விழிப்பு!


பயணம் புரிவதில் பாதையும் தேயப்
புயலாய்ப் புகையும் புழுதியும் மேவ
முயலென முந்தியே வந்துமேன் தூக்கம்?
உயரும் கரிகால் பதிவு! (carbon footprint)