Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sunday, December 8, 2019

ஐட்டம் சாங


இது ஒரு ஐட்டம் சாங். ஐட்டத்தின் பெயர் Tea!

அறிந்தும் அறியாமலும் படத்தில் வரும் "தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா" பாடல் மெட்டு
------
டீ குடிக்க டீ குடிக்க கேன்டீன் போலாம் வா
என் தலை ரொம்ப வலிக்குது
கேன்டீன் போலாம் வா
பிரேக் எடுத்து பிரேக் எடுத்து
வேலை செய்யலாம்
உன் மணி பர்ஸை மறக்காமல் கையில் கொண்டு வா
சால்ட்டு பிஸ்கட்டு அதைப் போட்டு நொறுக்கு
கோல்டு லிக்விடு அதை சூடா இறக்கு

சரணம்:
(நண்பனிடம்)
நண்பா, அந்த மெனுவைப் பார்த்து
நல்ல பிளேவர் தேர்வு செய்து ஆர்டர் செய்
(டீ போடும் பையனிடம்)
ஹே ப்ரோ, இதழ் பருக பருக
மனம் உருக உருக கொஞ்சம் தேநீர் செய்
பெருகுது பெருகுது நறுமணம்
நொறுங்குவது நொறுங்குவது நுரைமனம்!
இஞ்சிக்கு டீயுடன் திருமணம்!
மாலை மாற்றிடுதே...!
(Yes. Tea changes the evening)
ஓஹூ ஓஹூ ஹோ
ஒஹு ஒஹு ஓஹூ ஹோ!

#TeaSong
#Thanglish
#ThankYouYuvan

Monday, August 19, 2019

வாட்சாப் அதிகாரம்


1.
அகர முதல எழுத்தெல்லாம் அன்று!இன்று
வாட்சாப் முதற்றே உலகு
2.
வேண்டுதல் வேண்டா எலாமுள்ள வாட்சாப்பை
யாண்டும் நோண்டார் இலர்
3.
எப்பொருள் வாட்சாப்வாய் கேட்பினும் அப்பொருள்
கப்சாவா வென்றாய்ந் துணர்
4.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் வாட்சாப் கருமமே கட்டளைக் கல்
5.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையவாட் சாப்
6.
உழைப்பதற்கு இல்லாத நேரம் சிறிதளவு
வாட்சாப்க்கும் ஈயப் படும்
7.
இனிய உளவாக இன்னாத கூறிவிட்டு
சாந்துணையும் சச்சரவு ஏன்?
8.
பீலிபெய் வாட்சாப்பும் போரடிக்கும் பார்வர்ட்கள்
சால மிகுத்துப் பெயின்
9.
மோப்பக் குழையும் அனிச்சம் தலைகுனிந்து
நோக்கக் குழையும் கழுத்து
10.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்குக்
கேடாகும் வாட்சாப் சுவை

Wednesday, July 24, 2019

மெல்ல நட மெல்ல நட - remix


It is raining in Chennai. Ride your bikes safely.


ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?
குண்டுகுழி சாலைகள் மோசம்
வரும் வண்டிகளைக் கவிழ்த்துவிடும்
நம்மை one not eight (108) ஏற்றிவிடும்

சாலையை காண்ட்ராக்டர் அமைத்தார்
அதில் லாபத்தை அவர்தான் எடுத்தார்
சாலையை காண்ட்ராக்டர் அமைத்தார்
அதில் லாபத்தை அவர்தான் எடுத்தார்
காணவில்லை அதன் பெயர் தார்
நம் EB நண்பர் அதைப் பெயர்த்தார்
நம் EB நண்பர் அதைப் பெயர்த்தார்....
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?

வயதுள்ள மங்கையர் நடப்பார்
இங்கு வடைசுடும் பாட்டியும் கடப்பார்
வயதுள்ள மங்கையர் நடப்பார்
இங்கு வடைசுடும் பாட்டியும் கடப்பார்
சமிக்ஞையை அவர்தான் மதிப்பார்
அதை மீறிச்சென்றால் அவர் சபிப்பார்
அதை மீறிச்சென்றால் நம்மைச் சபிப்பார்....
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?

சாலையில் எதற்கிந்த துடுக்கு?
இரு கால்கைகள் உடைந்த பின் துடிப்பு
சாலையில் எதற்கிந்த துடுக்கு?
இரு கால்கைகள் உடைந்த பின் துடிப்பு
உயிருக்கும் இங்கில்லை மதிப்பு
தினம் ஏறிடுதே இரத்தக் கொதிப்பு
தினம் ஏறிடுதே இரத்தக் கொதிப்பு
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?
குண்டுகுழி சாலைகள் மோசம்
வரும் வண்டிகளைக் கவிழ்த்துவிடும்
நம்மை one not eight (108) ஏற்றிவிடும்

Wednesday, November 2, 2016

ஒத்த ரூபா தாரேன்

மாநகரப் பேருந்தில் வந்துகொண்டிருந்தேன்.
ஒரு பயணி 11 ரூபாய் சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்துவிட்டு கூட்டமாய் இருந்ததால் முன்னே நகர்ந்து சென்றார்.

நிறைய நேரம் ஆகியும் அந்தப் பயணி மீதி பணம் ஒரு ரூபாய் தராததால் நடத்துனர் கடுப்பாகி "ஏம்பா எங்க முன்னாடி போயிட்டே.. இன்னும் ஒரு ரூபாய் கொடு..." என்றார். அந்தப் பயணி "இதோ தரேன்" என்று பையில் துழாவிவிட்டு "பத்து ரூபாயா இருக்கு பரவாயில்லையா?" என்றார். "நீ நூறு ரூபாய் நோட்டாயிருந்தாலும் கொடு. மீதி தருகிறேன்" என்றார் மீண்டும் கடுப்பாக.

பயணி ஒருவழியாய் ஒரு பத்து ரூபாய் தாளை வழியில் நிற்பவர்களிடம் கொடுத்தனுப்பினார்.

பணம் கையில் சேர்ந்ததும் நடத்துனர் சொன்னார்..........
"மீதியை இறங்குறப்போ வாங்கிக்கோ !!!!!"

#நடத்து(னர்)டா!

Sunday, February 1, 2015

ஆஹா வந்துருச்சு


Celebrating the receipt of Salary !!

ஆஹா... வந்திருச்சா? ஆசையில் ஓடிவந்தேன்..
பாலும் பழமும் தேவையில்ல.. தூக்கம் வர்ல
காசு இன்னும் எங்கணக்கில் ஏறவில்ல..
(ஆஹா வந்துருச்சா..)

கன்னத்தில் முத்தம் தரும் குட்டிப்பொண்ணு
அந்தக் குட்டிப்பொண்ணு பீஸை இன்னும் கட்டவில்ல
கன்னத்தில் முத்தம் தரும் குட்டிப்பொண்ணு
அந்தக் குட்டிப்பொண்ணு பீஸை இன்னும் கட்டவில்ல
EMI நெருங்க,
நெருங்க நெருங்க
அடுத்தது என்ன? மறந்து போச்சே..
ஹா….ங் ஞாபகம் வந்துருச்சு
போனுல பேலன்ஸ் இல்ல (ஆஹா வந்துருச்சா..)

கிழக்கே போகும் ரயிலுதான்
சென்னைக் கடற்கரை வரைதான் போகுமே
கிழக்கே போகும் ரயிலுதான்
சென்னைக் கடற்கரை வரைதான் போகுமே
வேறொரு ஊருக்கு மனைவிய
வெகேஷன் கூட்டிட்டுப் போகணுமே
குழந்தைகள் ஓட குதித்து ஆட
குடும்பத்தோடு மகிழ்ச்சி கூட
ஹா….ங்.................................
சேலரி வந்துருச்சு
இன்னிமே ஜாலிதானே !!!!!!

சேலரி வந்துருச்சு, வேலைக்கு ஓடி வந்தேன்
பாலும் பழமும் சாப்பிடுவேன் - சேதி சொல்லி
சொந்தங்களைக் கூட்டிவச்சி சோறிடுவேன் !!
சேலரி வந்துருச்சு, வேலைக்கு ஓடி வந்தேன்
சேலரி வந்துருச்சு, வேலைக்கு ஓடி வந்தேன்

பாடலின் ஒலிவடிவம் இங்கே:

https://app.box.com/s/ak606k8reoi658pjscurzeyl1o45qens

Sunday, October 19, 2014

புரட்டாசி - லிமரிக்

புரட்டாசி முடிஞ்சி போச்சி
தைரியமா சாப்பிடலாம் கவுச்சி
அறுத்துத் தொங்குது அங்க ஆடு
வறுத்து வை ஆங்க்ரி பேர்டு
இந்தச் சேவலா காலைல கூவிச்சி?

Sunday, August 3, 2014

அத்தே.. அத்தே..

ஞாயிற்றுக் கிழமை மதியம்....

ஆடிமாதம் புதுமனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு வார இறுதியில்கூட மாமியார் வீட்டு விருந்து சாப்பிட முடியாமல் தனிமையில் தவிக்கும் நம் கதாநாயகன் பாடும் பாடல் வரிகள் இவை...

அத்தே அத்தே அத்தே சோறாச்சோ...?
அத்தே அத்தே அத்தே கொழம்பாச்சோ...?
மீன் சட்டிக்குள்ளாற
மீன் நீந்தித்தான் போச்சோ..?
அத்தே பிரியாணி புலவும்தான் செஞ்சீங்களா?
அந்தத் தொடகறியும் தொக்காட்டம் பண்ணீங்களா?
அதப் பல நாளாப் பாக்காம
பல்தேச்சும் பலனில்ல
பசியோடு கெடக்கேனே நானே.. நானே...


GV தம்பி இந்தப் பல்லவியை OK பண்ணுவாருன்னு தான் நெனக்கிறேன்.

அப்படியே டைரக்டருக்கும் ஒரு scene suggestion சொல்லிடணும்...
"ஹீரோ இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டே பாய் கடை பிரியாணியாவது பார்சல் வாங்கிவரலாம்னு தெருவில் நடந்து போறாரு.. பாட்டு முடியும்போது அங்காளம்மன் கோயில் வருது.. அங்கு ஒரு அக்கா ஆடி மாசம் கூழு ஊத்துறாங்க.. 'தம்பி இந்தாப்பா'ன்னு கொடுக்கவே மறுக்க முடியாம ஒரு டம்ளர் குடிக்கிறாரு. உடம்புக்குக் "குளிர்ச்சிப்பா"ன்னு சொல்லவே மேலும் இரண்டு மூன்று டம்ளர் வாங்கிக் குடித்துவிட்டு ஏப்பம் விடுகிறார்.. இதோடு லஞ்ச் போதும்னு மீசையில் ஒட்டிய கூழை நாவால் ஹீரோ வழிக்கும்போது அப்படியே காமிரா ஜூம் ஆகிறது.."

Saturday, November 16, 2013

எசப்பாட்டு

நேற்று தொலைக்காட்சி சேனல்களை மாற்றும் போது ஏதோ ஒரு சேனலில் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் படம் ஓடிக்கொண்டிருந்தது .. "கந்தசாமி, மாடசாமி..." பாடலை கமல் பாடிக்கொண்டிருந்தார்.

பக்கத்தில் அமர்ந்திருந்த என் வால் பொண்ணு உடனே அந்தப் பாட்டுக்கு எசப்பாட்டு பாடத் தொடங்கினாள்.."கந்தசாமி, மாடசாமி, டேரன் சாமி...!"

Friday, May 17, 2013

வெயிட்

சமீபத்தில் மருத்துவரிடம் சென்றபோது... நர்ஸ் எனது file-ஐ எடுத்து எழுதினார்..

நர்ஸ்: சார் உங்க ஏஜ்?

நான்: (மெதுவான குரலில்) "....."

நர்ஸ்: fever இருக்கா?

நான்: இல்லம்மா. வெறும் கோல்ட் மட்டும்தான்

நர்ஸ்: (வேயிங் மிசினைக் காண்பித்து) வெயிட் போடுங்கள் சார்.

நான்: என்னம்மா டாக்டர் ஆபிஸ்ல இருந்துட்டு வெயிட் போட சொல்றீங்களே..? வெயிட் போட வேணாம்னு சொல்லுங்கம்மா..!

நர்ஸ்: ஐயோ...... நீங்க வெயிட் போட வேணாம் இந்த வேயிங் மிசின் மேல ஏறி நில்லுங்க...!

Thursday, January 3, 2013

லிமரிக் - மங்கை

பொன் வண்டாடவே மலர்ப் பொய்கை
ஆண் திண்டாடவே மாதர் செய்கை
        வங்கமாக் கடலலை போல் பிடிவாதம்
        தங்கமாய் காகிதத்தை மாற்றும் இரசவாதம்
மங்கை கண்ணசைவில் செய்யும் சைகை

Friday, March 23, 2012

அத்தான்

வெட்டிங் டே கொண்டாடும் அழகு அத்தான்
வெட்டிங் டிரஸ் போடும் வழக்கம் வைத்தான்
         இழுக்கும் கை பலம் தான் குறைந்து போச்சோ
         இஸ்த்திரி போட்டதனால் நகர்ந்து போச்சோ
எட்டவில்லையே கோட்டு பொத்தான்.

Wednesday, September 1, 2010

காண்டீபன்

கையில் வில்லில்லாக் காண்டீபன்
கடையில் வாங்கித்தின்றான் கண்ட டிபன்
                   ராத்திரியில் அடிக்கடி கண்விழிச்சான்
                   பாத்ரூமில் பாதி இரவு கழிச்சான்
இன்னும் கொஞ்ச நாளைக்கு வெறும் "டீ, பன்"